கண்ணுக்குளே ஒரு முறை விழுந்தாலும்
கவிழ்த்திடும் உருவமன்றோ – நெஞ்சம்
தங்கிவிட மனச் சிறை விருந்தாக்கும்
தங்கச் சிலையுமன்றோ?
அன்னத்தின் பார்வை விழுந்திடவேண்டி
ஆசை அலையுமன்றோ?
அன்னத்தின் பார்வை விழுந்திடவேண்டி
ஆசை அலையுமன்றோ?
அன்பினில் மனங்கள் சேர்ந்தபின்னாலே
தேவை வேறுமுண்டோ?
தேவை வேறுமுண்டோ?
கண்ணுக்குளே ஒரு முறை விழுந்தாலும்
கவிழ்த்திடும் உருவமன்றோ – நெஞ்சம்
தங்கிவிட மனச் சிறை விருந்தாக்கும்
தங்கச் சிலையுமன்றோ?
பார்வையில்நானும் உன்னுடன் பேச
விரும்பும் உறவில்லையா
பார்வையில்நானும் உன்னுடன் பேச
விரும்பும் உறவில்லையா - சிறு
ஐயமின்றிநம் மனங்களை இணைத்த
காதல் பெரிதில்லையா?
காதல் பெரிதில்லையா?
கண்ணுக்குளே ஒரு முறை விழுந்தாலும்
கவிழ்த்திடும் உருவமன்றோ – நெஞ்சம்
தங்கிவிட மனச் சிறை விருந்தாக்கும்
தங்கச் சிலையுமன்றோ?
காமம் இழைந்தோடும் கனவை சரி செய்ய
காதல் மனம்நாடுவோம்
காமம் இழைந்தோடும் கனவை சரி செய்ய
காதல் மனம்நாடுவோம் உயிர்
வாழும் பொழுதென்றும் காதல் குறையாத
வாழ்வை நாம் வாழுவோம்
வாழ்வை நாம் வாழுவோம்
கண்ணுக்குளே ஒரு முறை விழுந்தாலும்
கவிழ்த்திடும் உருவமன்றோ – நெஞ்சம்
தங்கிவிட மனச் சிறை விருந்தாக்கும்
தங்கச் சிலையுமன்றோ?
No comments:
Post a Comment