Monday, July 12, 2010

மொக்கை இரண்டு

நண்பர்களுக்கு, நேற்று வைதேகி காத்திருந்தாள் படம் பார்த்தேன். அதுல ஆல் இன் ஆல் அழகுராஜா கவுன்டமணி காமெடி சீன்களில் இரண்டை உருவி நம்ம குழுவுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மாத்தி தந்திருக்கேன். நேற்றே ஸ்கிரிப்ட் மனசுல ரெடியா இருந்தாலும் நேரம் கிடைக்கல எழுத. அதனால ஒரு நாள் தாமதமா இன்று தந்திருக்கேன். ஜீவ்ஸ் அண்ணன் மன்னிக்கனும். அண்ணன் எப்ப என்னோட பேசுனாலும் மரியாதை கொடுத்துத்தான் பேசுவார். வாப்பா போப்பானு.. இதுல அது கொஞ்சம் மாறி இருக்கும். இந்த மாதிரி எல்லாம் நான் பேசவே மாட்டேனேனு அவருக்கு கோபம் வரலாம். அப்படி வந்தா குழுமத்துல வேண்டாம் அண்ணே... தனியா போன் போட்டுத் திட்டுங்க...

மொக்கை இரண்டொழிய வேறில்லை சத்தியமாய்

மொக்கையான சக்கை இது.”

மொக்கை 1

( ஜீவ்ஸ் அண்ணன் மடல் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இன்விசிபிளில் இருந்தபடி திடீரென சாட்டில் கூப்பிடுகிறார் பிரசாத்.)

பிரசாத்: அண்ணே… அண்ணே…

ஜீவ்ஸ்: (சலிப்புடன்)ஏன்டா பிரசாத், எப்ப பார்த்தாலும் மர கழன்ட மாதிரியே பேசிட்டிருக்க.

பிரசாத்: என்ன அண்ணே பன்றது. வாழ்க்கை சுத்தமா போரடிக்குதுண்ணே.

ஜீவ்ஸ்: உனக்கு கூடவாடா!

பிரசாத்: அதிருக்கட்டும் அண்ணே. நீங்க மட்டும் எப்படிண்ணே ஃபிரிட்ஜ்ல வைச்ச வெஜிடபிள் மாதிரி எப்பவும் பிரஷ்ஷாவே இருக்கீங்க.

ஜீவ்ஸ்: ஓ… அதை கேக்குறியாடா நீ. அது ஒன்னுமில்லைடா. எனக்கு எப்பவெல்லாம் போரடிக்குதோ அப்ப எல்லாம் சீரியஸான குழும மடல்ல போய் மொக்கை போடுவேன். சீரியஸா பேசுறவங்க சீரியஸா பேச, மொக்கை போடறவங்க மொக்கை போட கடைசியா அந்த மடலை படிக்கும் போது ஒரே சந்தோஷமா ஆயிடும். நீயும் வேணும்னா டிரை பண்ணி பாரேன்.

பிரசாத்: சரி அண்ணே. நானும் டிரை பண்றேண்ணே.

ஜீவ்ஸ்: இன்விசிபிள்ல போனா மொக்கை போட முடியாது. பச்சை கலர்ல அவைலபிள்ள போ. அப்பதான் குழுமத்துல இல்லைன்னாலும் சாட்ல மொக்கை போடலாம்.

(மொக்கை போடச் சென்ற பிரசாத், குழுமத்தில் மொக்கை போட்டு குழுமம் கும்மு கும்மு என்று குமுறிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது குழுமத்துக்குள் வருகிறார் ஜீவ்ஸ் அண்ணன்)

ஜீவ்ஸ்: நிறுத்துங்கப்பா, நிறுத்துங்கப்பா… யாரை கும்முறீங்க… பிரசாத்தையா… அவன் ஒரு அப்பாவியாச்சே... எதுக்கு கும்முறீங்க.

குழுமம்: தப்புத்தான்யா, அவனை கும்மி இருக்க கூடாது. அவனோட பழக்கம் வைச்சு இருக்கியே உன்னைத்தான் முதல்ல கும்மனும்.

ஜீவ்ஸ்: என்னது, நானா, இவனோட பழக்கமா… அப்படின்னு யாரு, இந்த வெளங்காப் பயல் சொல்லிட்டுத் திரியறானா… அப்படி என்னத்தன்யா செஞ்சான் இவன்.

பிரசாத்: அண்ணே, நீங்களே சொல்லுங்க அண்ணே. நீங்க தானே அண்ணே சாட்ல பேசும்போது, போரடிச்சா, சீரியசான மடல்ல மொக்கை போடச் சொன்னீங்க. அதான் போரடிக்குதேனு குழுமத்துல வந்த இரங்கல் மடல்ல மொக்கை போட்டேன் அண்ணே. அது ஒரு குத்தமுன்னு இப்படி போட்டு கும்முறாங்க. எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை அண்ணே. இதை நீங்கதான் பஞ்சாயத்து பண்ணி வைக்குறீங்க..

ஜீவ்ஸ்: ஒரு நிமிஷம்... போன் வருது… இப்ப வர்ரேன்… ஹல்லோ… ஹல்லோ…

பிரசாத்: அண்ணே… பஞ்சாயத்து…

ஜீவ்ஸ்: வெளங்கா பயலே… என்னை மாட்டி விடவா பார்க்குறே…

(குழுமத்தோடு சேர்ந்து தானும் கும்ம ஆரம்பிக்கிறார் ஜீவ்ஸ்).


மொக்கை 2

(ஆகஸ்டு மாத தமிழ்த்தென்றல் குழும மின்னிதழுக்கான மேற்பார்வை பணியில் இருக்கிறார் ஜோசப் அண்ணன். அப்பொழுது அங்கே வரும் XXXXX)

XXXXX: என்ன, குழும மின்னிதழா அண்ணே…

ஜோசப்: ஆமாம். உனக்கு என்ன வேணும்.

XXXXX: மின்னிதழில் நானும் ஆசிரியர் ஆகனும்ணே.

ஜோசப்: யார்ரா நீ?

XXXXX: என்னத் தெரியலையா, நானும் இந்த குழுமம்தான் அண்ணே. குழுமத்துல ரொம்ப காலமா நானும் இருக்கேன் அண்ணே.

ஜோசப்: நீ… ரொம்ப காலமா இருக்கே... இந்த ஜோசப்புக்குத் தெரியாம ஒரு ஆளு இந்த குழுமத்துல ரொம்ப நாளா இருக்க முடியுமா. போடா. போ உனக்கெல்லாம் சான்ஸ் இல்லை.

XXXXX: நான் ஒரு தென்றல் உறுப்பினன். எனக்கு மின்னிதழ் ஆசிரியர் குழுவில இடம் இல்லையா.

ஜோசப்: டேய், உன் பேரு என்னடா?

XXXXX: அண்ணே, நான் தான் அண்ணே பிரசாத்.

ஜோசப்: பிரசாத்துனு பேரு வச்சவனுக்கெல்லாம் குழும மின்னிதழ் ஆசிரியர் குழுவில இடம் தர்ரதில்லை. ஓடிப்போ...


(விட்டால் போதுமென்று பிரசாத் தலைதெறிக்க ஓடுகிறார்.)