Tuesday, May 25, 2010

சிறுகதை முயற்சி

இராணுவன் கனவு

அப்பா போரில் இறந்து இன்றோடு ஒரு வருடமாகிறது. அப்பாவின் ஆசைப்படி இராணுவத்தில் இன்று துப்பாக்கிகளைச் சுமந்தபடி எதிரி நாட்டுப் படைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். கடும்குளிரின் பாதிப்பாலும், இரண்டு நாட்களாக நடந்து வந்த களைப்பாலும் இளைப்பாறுகிறார்கள் எனது குழுவினர். ஆனால் என் மனம் இளைப்பாற மறுக்கிறது. அப்பாவைக் கொன்ற எதிரி நாட்டு படை வீரர்களை அழிக்கும் வேகத்தோடு முன்னேறுகிறேன். கண்கள் சொருகுகிறது. நாக்கு வறள்கிறது. கால்கள் தள்ளாடி கீழே விழும் சமயம், தூரத்தில் பறவையின் சிறகாய் எதிரிகளின் கூடாரம்.


மெதுவாய் திரும்பி பார்க்கிறேன். எனது குழுவினர் எனக்கு பின்புறமாய் வெகு தொலைவில் புள்ளிகளாய் இளைப்பாற, எனக்கு முன்னே என்னை ஆசை ஆசையாய் தூக்கி வளர்த்த அப்பாவைக் கொன்ற எதிரி நாட்டு படைகள். எனது இராணுவப் பையைத் தடவிப் பார்க்கிறேன். எதிரிகளின் நான்கு கூடாரங்களுக்கு ஏதுவாய் நான்கு நேரம் சார் வெடிகுண்டுகள். பூனை போல் மெதுவாய் அடி வைத்தும், கழுகு போல் கூரிய பார்வையோடும் மெதுமெதுவாய் எதிரிகளின் கூடாரம் நோக்கி நகர்கிறேன், சோர்வால் உடல் வலுவிழந்த போதும் அப்பாவின் மரணத்திற்கு பழி தீர்க்கும் வெறியோடு.


இதோ நெருங்கி விட்டேன் எதிரிகளின் கூடாரத்தை. எதிரிகளின் இரண்டு ரோந்து படைவீர்கள் மற்ற வீரர்கள் உறங்க காவலாய். இவர்களைக் கொன்றால் தான் நான் கூடாரத்திற்கு வெடிகுண்டைச் சுலபமாகப் பொறுத்த முடியும். மரங்களுக்கிடையே நகர்ந்து மெது மெதுவாய் ஒரு முனையில் இருக்கும் ரோந்து காவலாளியை நெருங்கி விட்டேன். விஷம் தோய்ந்த கத்தியைக் கையில் ஏந்தியபடி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறேன், ஆறு, ஐந்து, நான்கு… விஷ்க்க்க்…. சத்தம் வராமல் இருக்க அவன் வாயை ஒரு கையால் பொத்தியபடி மற்றொரு கையால் கழுத்தில் இறக்கப்பட்ட கத்தியின் பரிசாகத் தெரித்த இரத்தப் பொட்டுகளை முகம் முழுவதும் ஏந்துகிறேன்.


பாதி கிணறு கடந்து விட்டேன். இன்னும் எதிர்முனையில் இருக்கும் ரோந்து காவலாளியும் கொன்று விட்டால் கூடாரங்கள் எளிதில் அழிக்கப்பட்டு விடும். மெதுமெதுவாய் நகர்ந்து அவனையும் இதோ முதலாமவனைக் கொன்றது போல ஆனால் அதிக வெறியுடன் மிகவும் ஆழமாக இறங்கியது கத்தி இரண்டாமவன் கழுத்துக்குள்ளும். ஏதோ இந்த இருவர் தான் என் தந்தையைக் கொன்றதாகவும் அவர்களை பழிதீர்த்துக் கொண்டதாகவும் மகிழ்ச்சி எனக்குள். கூடாரத்தில் தூக்கத்தில் இருப்பவர்கள் விழிக்கும் முன் கூடாரங்களுக்கு வெடிகுண்டுகள் பொறுத்த வேண்டும். முதல் கூடாரத்தில் பொறுத்திய வெடிகுண்டிற்கு 14 நிமிடங்கள் கழித்து வெடிக்குமாறு ஆரம்பித்து ஒவ்வொரு கூடாரத்திற்கும் ஒரு நிமிடமாய் குறைத்து நான்கு கூடாரங்களுக்கும் வெடிகுண்டு பொறுத்தி ஆகி விட்டது.


இனி நான் வந்த வழியில் திரும்பி சென்று எனது ஆட்களுடன் சேர வேண்டியது தான். மிகவும் வேகமாக, அதே சமயம் சத்தம் எழுப்பாமல் எனது ஆட்களின் கூடாரம் நோக்கி நகர்கிறேன். முன்பு மயங்கி விழவிருந்த அதே இடம், எனது ஆட்களின் கூடாரத்திற்கும் எதிரிகளின் கூடாரத்திற்கும் நடுவே. எனது கூடாரத்தின் பக்கம் புள்ளிகள் இங்கும் அங்குமாய் நகர்வதைக் கண்டு உணர்ந்தேன் எனது ஆட்கள் விழித்தெழுந்து என்னைத் தேடுகிறார்கள் என. நேரம் பார்த்தேன். இன்னும் பத்து வினாடிகள் தான் எதிரிகள் கூடாரம் வெடிக்க. எதிரிகளின் கூடாரத்தை வேடிக்கைப் பார்த்தபடி நொடிகளை எண்ணுகிறேன். நான்கு, மூன்று, இரண்டு…… பீங்ங்ங்ங்…. அலாரம் மணியின் ஓசைக் கேட்டு விழித்தெழுந்தேன். எதிரிகளை பழிவாங்கி தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இராணுவத்தில் இணைவதற்கு என்னை ஆயத்தப்படுத்துகிறேன், காலணிகளை அணிந்தவாறும் கனவை அசைப்போட்டபடியும்.

Friday, May 21, 2010

கிறுக்கல் - 41

அவசரமாய் ஏறும் பேருந்தில்
அமர்வதற்காய் ஒரு இடம்
ஓடிய களைப்பு தீர
ஆசுவாசத்திற்காக பாட்டில் தண்ணீர்
எழுதாமல் விட்ட பாடங்களை
எழுதித் தருமோர் கை
பேசத் தயங்கும் போது
தைரியம் தரும் பார்வை
தோல்வியில் துவண்ட போது
தாங்கக் கொடுக்கும் தோள்
பல பேர் முன்னிலையிலும்
பேசிக் கொள்ள கண்கள்
வேற்றி மட்டுமே கிடைக்க
கடவுளை வேண்டிய இதயம்
எல்லாம் இழந்து தனிமரமாய்
தோழியிடம் சொன்ன காதல்..

Thursday, May 20, 2010

வித்தியாசமான முயற்சி

நண்பர்களே, இதுவரைக்கும் நானும் நிறைய கிறுக்கி இருக்கேன். வித்தியாசமான ஒரு முயற்சியாய் "பம்பாய்" படத்தின் தீம் மியூசிக்கிற்கு வரிகள் எழுதி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து ஒரு அறுபது சதவீதம் ஒத்து வருகிறது என்றே நினைக்கிறேன். உங்கள் பார்வைக்காய் இதோ... எங்கு இன்னும் மெருகேற்றலாம் எனச் சொல்லவும்.

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோஓஓஓஓம்

கலகங்கள் செய்வோர்-கேளீஈஈஈஈர்

கலகங்கள் செய்வோர்-கேளீஈஈஈஈர்

காணாத இறைபெயரால் கலகங்களாஆஆ…..

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

உள்ளம் ஆலயம் உள்ளம் ஆலயம்

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோம் அன்பாலே உலகாளுவோம்

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோம் அன்பாலே உலகாளுவோம்

காணாத இறைபேரில் கலகங்கள் செய்வித்தே

வாழ்நாளின் பொழுதை வீனாக்கலாமா

வாழ்நாளின் பொழுததையும் வீனாக்கலாமாஆஆஆ

அன்பொன்றே அன்பொன்றே நிலையான தெய்வம்

அன்பில்லா இடமதிலே நிலையாது மனிதம்

அன்பாலே உலகாளுவோம் அன்பாலே உலகாளுவோம்


Saturday, May 15, 2010

கிறுக்கல் - 40
இலக்கில் தெளிவுற சீடரைக் கண்டே

துரோணரும் கேட்டிட்ட கேள்வியைப் போல

எனக்குள் எழுப்பிய கேள்வியால் நானும்

உணர்ந்தேன் என்னிடம் இல்லை இலக்கென…


Sunday, May 9, 2010

ஆல் இன் ஆல் சவுன்ட்மணி கம்ப்யூட்டர் வாடகை கடை

காட்சி 1: சவுன்ட்மணி கடையும் தொந்தில் என்ட்ரியும்

தொந்தில்: அண்ணே வணக்கம் அண்ணே.

சவுண்ட்மணி: வாடா பெட்ரமாக்ஸ் மண்டையா, என்னடா இந்த பக்கம் ?

தொந்தில்: என்ன அண்ணே புதுசா கடை எல்லாம் தொறந்திருக்கீங்க.

சவுண்ட்மணி: ஆமான்டா, பேரிக்கா மண்டையா, நம்மூருல கம்ப்யூட்டர் இல்லையே, நாமளும் சும்மா தான இருக்கோம், அதான் கம்ப்யூட்டர் ஒன்னு வாங்கிட்டு வந்து வாடகைக்கு விட்டு வியாபாரம் பண்றேன்டா.

தொந்தில்: உங்களுக்கு என்ன அண்ணே தெரியும், கம்ப்யூட்டரைப் பத்தி.

சவுண்ட்மணி: டேய், என்ன கேள்வி கேட்டடா நீ என்னையப் பார்த்து, இந்த ஆல் இன் ஆல் சவுன்ட்மணிக்கு தெரியாத வேலை ஒன்னு இந்த ஒலகத்துல இருக்குதாடா. என்ன தெரியனும் கேளுடா கம்ப்யூட்டர்ல. புட்டு புட்டு வைக்குறேன் நான் பணங்கொட்டை தலையா.

தொந்தில்: அடடடடா, அண்ணே நீங்க பெரிய அறிவாளி அண்ணே. கம்ப்யூட்டர் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க அண்ணே.

சவுண்ட்மணி: அடேய் பெட்ரமாக்ஸ் மண்டையா, இந்த ஊருலையே உன்னைய யாரும் பக்கத்துல கூட சேர்த்துறதில்லை. இருந்தும் உன்னைய ஏன் என் கூட வச்சிருக்கேன். என்னோட இந்த பெருமையெல்லாம் ஊருக்குள்ள சொல்லுவேன்னு தான். அப்பத்தான் இந்த ஊரு ஜனங்களுக்கு என் அருமை பெருமை எல்லாம் புரியும். முக்கியமா இந்த இளவயசுப் பொண்ணுங்க கிட்ட என் பெருமையைச் சொல்லனும்டா… என்ன சரியா…

தொந்தில்: சரிங்க அண்ணே. அப்படியே செய்யுறேண்ணே. எனக்கும் சொல்லித் தாங்க அண்ணே இதெல்லாம்.

சவுண்ட்மணி: என்னது உனக்கும் கம்ப்யூட்டர் தெரிஞ்சுக்கனுமா. இது என்ன தெரியுமாடா, கம்ப்யூட்டர். இதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமாடா. பஞ்சாயத்து டிவியை முட்டு சந்துல இருந்துக்கினு வேடிக்கை பார்க்குற நாய்க்கு ரவுசைப் பாரு, எகத்தாளத்தைப் பாரு. அடிக்கிறதுக்குள்ள ஓடிப்போயிடு.

( அடி வாங்காமல் தப்பிக்க தொந்தில் ஓட்டமெடுக்கிறார்)

காட்சி 2: தொந்தில் ஆக்ஷனும், சவுன்ட்மணி டென்ஷனும்

(அடிக்கு தப்பி ஓடிய தொந்தில், அடுத்த நாள் சவுன்ட்மணி, கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்வதைப் பார்க்கிறார். அப்பொழுது…)

தொந்தில்: அண்ணே, அண்ணே…

சவுண்ட்மணி: டேய், நான் பிஸியா இருக்கேன், டிஸ்டர்ப் பண்ணாத.

தொந்தில்: அண்ணே, என்ன அண்ணே செய்றீங்க. சொல்லுங்க அண்ணே…

சவுண்ட்மணி: டேய் ஆப்பிரிக்கா மண்டையா, கம்ப்யூட்டர் வாடகைக்கு கேட்டிருக்காங்கடா ஒரு வாரத்துக்கு. இதுல பேன் சரியா ஓடலை. அதான் ரிப்பேர் பண்றேன்டா.

தொந்தில்: அண்ணே, அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே. கம்ப்யூட்டர்ல என்னாத்துக்கு அண்ணே பேன்.

சவுண்ட்மணி: ஆங்… அப்படி கேளுடா பேரிக்கா மண்டையா. இதுக்குத்தான் இந்த ஆல் இன் ஆல் சவுன்ட்மணி வேணும்ன்றது. சொல்றேன் கேட்டுக்க. இதுதான் CPU. இந்தா இந்த வெத்தலை டப்பா மாதிரி இருக்குதே இதுதான் ஹார்ட் டிஸ்க். இந்தா இங்க சீப்பு மாதிரி பச்சைகலர்ல இருக்குதே இது தான் RAM. இது எல்லாம் கம்ப்யூட்டர் வேலை செய்யும் போது சூடாகும். இதெல்லாம் சூடாகாம இருக்கத்தான் இந்த பேன். இப்ப புரியுதாடா.

தொந்தில்: இப்படி பேன்ல ஆற வைச்சா எப்படிண்ணே சூடு குறையும் என்றபடி பக்கத்தில் இருக்கும் வாளித் தண்ணீரை CPU மீது ஊற்ற புகைமண்டலமாகிறது கம்ப்யூட்டர்.

(சவுன்ட்மணி முறைக்க சவுன்ட்மணியின் அடியிலிருந்து தப்பிக்க தொந்தில் ஓட்டமெடுக்கிறார்)

ரோசா: சார், சார்…

சவுண்ட்மணி: யாரும்மா என்னம்மா வேணும்.

ரோசா: சார், நான் ரோசா சார், எனக்கு டைப்படிக்க கம்ப்யூட்டர் வேணும் சார். இங்க கிடைக்கும்னு சொன்னாங்க. அதான் வந்தேன்.

சவுண்ட்மணி: ஏம்மா, டைப்படிக்க கம்ப்யூட்டர் தான் வேணுமா. இந்த டைப்ரைட்டர் எதுவும் வேணாமா.

ரோசா: அதெல்லாம் வேணாம் சார், கம்ப்யூட்டர் தான் வேணும்.

சவுண்ட்மணி: அப்படின்னா கம்ப்யூட்டர் எல்லாம் இப்போதைக்கு தர முடியாது போம்மா.

ரோசா: ஏன் சார், ஏன் கம்ப்யூட்டர் தர முடியாது.

சவுண்ட்மணி: ஆங்… ரோசான்னு பேரு வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் இந்த கடையில கம்ப்யூட்டர் தர்ரதில்லை. போவியா…

ரோசா: ரொம்பத்தான்... ம்க்கும்…

(புகையும் கம்ப்யூட்டரைப் பார்த்தவாறே கடை போர்டை உடைக்கிறார் சவுண்ட்மணி. திரை விழுகிறது.)

Thursday, May 6, 2010

கிறுக்கல் - 39

ஒரு ரூபாய் கொடுத்தால்தான்

கடைக்கு போவேன்

அடம் பிடித்த சிறுவாடுடன்

கடைக்குப் போகும் குழந்தையிடம்

பாக்கியைத் தந்துவிட்டு

பொருளைத் தொடச்சொல்லும்

பலசரக்கு கடைக்காரர்…