Friday, February 26, 2010

கிறுக்கல் - 20

சல சல காகித சத்தம்

சாந்தமாய் கைகள் பேசும்

சிந்திக்கும் நேரம் யாவும்

சீராய்க் காலடிக் கேட்கும்

சுற்றிடும் ஆசிரியர் கண்டு

சூடாகி மூளை குழம்ப

செவ்வனே படித்தவர் எழுத

சேட்டைகள் செய்திட்ட நானோ

சைகையில் காலம் கடத்தி

சொந்தமாய் எழுதிட தெரியா

சோகமாய் இருப்பதைக் கண்டு

சொக்கியக் குறைவோ என்றே

ஆசிரியர் என்னைக் கேட்க

அடங்கனா சிரிப்பால் வகுப்பே

சிரித்திட்ட நாளை எண்ண

சிரிக்கிறேன் இன்றும் நானே… J

Thursday, February 25, 2010

கிறுக்கல் - 19

கோவிலின் ஓர் மூலையில்
அமர்ந்திருந்த ஓர் ஆண் பெண்ணைக் கண்டு
சகோதர சகோதரி என்று
காதலன் காதலி என்று
கள்ளக்காதலர் என்று
கனவன் மனைவி என்று
கண்டதும் எண்ணி குழம்பும் மனிதம்
வழிபட வந்ததை மறந்து
கற்பனைக்கேது தடை...

சச்சினுக்கு வாழ்த்து

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு
நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

நான் புடிச்ச மட்டை பாரு

நான் அடிச்ச பந்தை பாரு

நான் ஆடும் ஆட்டத்தை பார்த்திடு நீ அட

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு
ஏய் ஆடு ஆடு ஆட விடு

ஆடும் போது ரன்னை எடு

முறைச்சு பார்த்தா சிரிச்சு நில்லு

பந்து போட ஆறாய் எடு

ஏய் ஆடு ஆடு ஆட விடு

ஆடும் போது ரன்னை எடு

முறைச்சு பார்த்தா சிரிச்சு நில்லு

பந்து போட ஆறாய் எடு

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

ஏய் மை ராசா

வா நீ க்ளோஸா

ஆடு என் கூட அடிச்சு ஆறா
ஆறா ஆறா ஆ ஆ ஆ ஆ ஆ

நாலா நாலா நா நா நா நா நா
பந்தை பார்த்து அடிக்கனும்

பார்ட்னருக்கும் கொடுக்கனும்

ரெண்டு பேரும் சேர்ந்து தான் எதிரிபந்தை அடிக்கனும்

கில்லிகோலி ஆடுறவன் கிரிக்கெட்டும் ஆடனும்

நீ தாய் நாடு வென்று காட்டி தாய்நாட்டை உயர்த்தனும்

கை தட்டி நிற்காதே

வீன் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுனு கவலைப்பட்டு ஏங்காதே

கனவு ஜெயிக்க வேணும்ன்னா கண்ணை மூடித் தூங்காதே

ஆடவேணும் ஆட்டம் என் போல சூப்பர் ஆட்டம்

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

கிறுக்கல் - 18

படிக்கின்ற காலமதில் பலபணிகள் தேடிவர

படித்திட்ட படிப்பிற்கே பணியதனை செய்திடுவேன்

பிடிவாதம் பிடித்திட்டே தேடிட்டேன் பணியதனை

வேலையதும் கிடைத்ததுவே விரும்பாத வெளியூரில்

புதிதான இடமதிலே தெரியாத மொழிகேட்டு

திகைத்திட்டே நின்றிருக்க அலுவலகம் அனுப்பிவைத்த

பணியாளும் அழைத்திட்டான் போவோம்நாம் தங்குமிடம்

புரியாமல் நான்விழிக்க பையதனை அவன்தூக்க

புரிந்ததுவே எனக்குந்தான் செல்லுகின்றோம் தங்குமிடம்

கொட்டுகின்ற மழையதிலே குடையேதும் இல்லாமல்

ஆட்டோவைத் தேடித்தான் அலைந்திட்டோம் பையோடே

தங்குமிடம் சென்றடைந்து களைப்புதீர குளித்ததுமே

அனலாகக் தகித்ததுவே பசியாலே வயிறுந்தான்

சமைப்பவர்க்குப் புரியாது நான்பேசும் தமிழ்மொழி

எனக்குந்தான் தெரியாது அவன்பேசும் தேசமொழி

பசிக்கிறது என்றுசொல்ல பரிதவித்தேன் துடிதுடித்தேன்

புத்தகத்தைத் தேடிநின்றேன் பசிக்கிறது என்றுசொல்ல

பச்சைத்தண்ணீர் நானருந்தி பசிமறக்க படுத்துறங்க

நெஞ்சினிலே சூளுரைத்தேன் கற்கவேண்டும் பலமொழிகள்… J

கிறுக்கல் - 17

அன்றென்னை
இதயமா இதயத்துடிப்பா
நீ எனக்கு
என்றாய்
மாற்றத்திற்குட்படும்
இதயத்துடிப்பல்ல
மாறாத இதயம்
என்றேன் நான்
துளிர்த்தது உன்னுள்
கண்ணீருடன்
காதல்...

இன்று
இதயமாய் நீயில்லை
துடிப்புகளாய் உன் நினைவுகள்
தாரையாய் வழிகிறது என்னுள்
கண்ணீர்
உன் பிரிவால்...

கிறுக்கல் - 16

சுட்டெரிக்கும் சூரியனை சுகந்தமான சந்திரனை
விட்டெரியும் வின்மீனை வீசுகின்ற வாயு(காற்று)மதை
அகத்துள்ளே கொண்டிட்டே ஆடையாக மேகத்தையே
அணிந்திட்டே அண்டமெல்லாம் விரிந்திருக்கும் வானமகள்…

வெம்மையின் புழுக்கமதும் கடுங்குளிரின் நடுக்கமதும்
எரிகல்லின் தாக்கமதும் பெருமழையின் வெள்ளமதும்
தன்னாலே நேர்ந்ததென தாக்குகின்ற மக்கள்வசை
தன்னகத்தே உடையவர்க்காய் தாங்குகின்ற தாயுமவள்…

Wednesday, February 24, 2010

கிறுக்கல் - 15

எட்டெட்டு சதுரத்தில்
எட்டெட்டு சேவகரை
எதிரெதிரே முன்னிறுத்தி
எதிரியை வென்றிடவே
எத்தனித்து வியூகம்பல
எடுத்திட்டே முன்நகர
எதிர்ப்பவரை கொன்றிட்டும்
எதிர்வியூகம் அமைத்திட்டும்
எதிர்பாரா சூழ்நிலையை
எப்படிநாம் ஏறிடலாம்
என்றேநம் சிந்தைக்கே
எடுத்தியம்பும் சதுரங்கம்…

கிறுக்கல் - 14

எதையும் சிந்தியாமல்
ஏதாவது எழுத
எழுதிட அமர
எண்ணங்கள் நகரா
எழுத்தும் நகரா
எழுதாமல் நிற்க
எனக்குள் தொடங்கியது
எழுத்துடன் போர்...

பலகுரல் கலைஞன்

எவர் போலவும் பேசுவேன்
எதுபோலவும் பேசுவேன்
இறுமாப்புடனே அலைந்திருந்தான்
மகவொன்றின் மழலையைக் கேட்காதவரை...


வெறுமை

காகித வெ(வ)றுமையை
நிரப்பிடத் துடிக்கும்
மைநிறை எழுதுகோல்
மனதை அறியா
எழுத்துகள் கிடைக்கா
எண்ணத்தில் வெ(வ)றுமை...

Saturday, February 20, 2010

கிறுக்கல் - 13

அம்மாவின் வசவுகளை

அனாயசமாய் புறந்தள்ளி

உறக்கம் கலைந்ததும்

ஆழ்ந்த சிந்தனையில்

யாரோ எவரோ

என்னைத் துரத்த

இன்ன காரணம்

என்றே விளங்கா

உள்ள(த்தின்) பயத்தின்

உந்துதலால் வந்த

இயற்கை உபாதை

இம்சை தொலைய

வெளியே சென்றே

வெளியேற்றி வந்தோம்

இருந்தும் எப்படி

ஈரம் படுக்கையில்

கடிந்திடும் அம்மாவிடம்

எப்படி சொல்ல

கனவில் நடந்ததை

குழப்பத்தில் குழந்தை… J

Friday, February 19, 2010

கிறுக்கல் - 12

பகலவனாய் நீயும்வர

பனித்துளியாய் நானுருக

பதறாமல் காதலதை

பகன்றிடவே தினம்துடித்தேன்

தருவாயோ மறுப்பாயோ

தவிப்புடனே அருகில்வர

தயக்கமோடு நாணமதும்

தடுத்திடவே சொல்லிழந்தேன்

கல்லறைக்குப் போகுமுன்னே

கருனைகொண்டு வார்த்தையாலே

காதலனே உரைத்திடுவாய்

காதலுக்கு உயிர்தருவாய்

பள்ளிமுதல் இன்றுவரை

பழகிவரும் நம்உறவை

மரணம்வரை நிலைத்திடவே

மணக்கோலம் எனக்கருள்வாய்

கிறுக்கல் - 11

நினைவு தெரிந்த நாள் முதலாய்

நினைவாய் எனக்கு இருப்பவனே

தோல்வியில் நான் துவளும் போது

தோல்வியைத் தோற்கடிப்பாய் என்றவனே

உறவுகள் அனைத்தும் வெறுத்த போதும்

உறவாய் எனக்கு இருப்பவனே

நம்பிக்கை நானும் இழக்கும் நேரம்

நம்பிக்கை வார்த்தை அளிப்பவனே

வாழ்க்கையில் நான் இழந்தவை யாவும்

வாழ்க்கையாய் உன்னில் கிடைக்குமென்றே

காதலைச் சொன்னேன், உணர்ந்தே நீயும்

காதலைச் சொல்லி வாழ்வளிப்பாயே…


கிறுக்கல் -10

என்னை அறிய
எனக்குள் என்னை
அனுதினம் தேடி
அறிய முடியாமல்
அலைந்த களைப்பால்
அயர்ந்து உறங்கி
அறிந்ததாய் எண்ணி
அமரும் சமயம்
ஆழ்ந்த உறக்கம்
அழைப்பினை விடுக்க
மீண்டு வருவேன்
மீன்டும் என்னை
நான் யாரென்று
நானே அறிய…

Monday, February 15, 2010

கிறுக்கல் - 9 (முன்னாள் ஆசிரியரிடம் ஒரு மாணவனின் புலம்பல்)

பள்ளிக்கால நாட்களிலே ஐயா
படிக்கத்தான் சொன்னீர்கள் என்னை
வகுப்பதனில் தினந்தோறும் ஐயா
வசைபாடி திருத்தமுனைந்தீர் என்னை

விளையாட்டாய் எடுத்தெறிந்தே ஐயா
வீனாக காலங்கழித்தேன் நானும்
நண்பர்களிடம் உங்களையும் ஐயா
நகைச்சுவையாய் கேலிசெய்தேன் நானும்

பள்ளியிலே படித்தவொரு நண்பன்
பட்டம்பெற்று உயர்பதவி சென்றான்
பார்க்கச்சென்ற என்னையுமே அவனும்
பாராமல் துரத்திடவே துடித்தேன்

அறிவுரைகள் அனைத்தையுமே ஐயா
அனாவசியமாய் தள்ளினேனே நானும்
அன்பான உம்வார்த்தை அனைத்தும்
அனுபவத்தில் சிறந்ததென உணர்ந்தேன்

Thursday, February 11, 2010

கிறுக்கல் - 8

மண்ணில்நான் பிறக்கையிலே

பெற்றவர்கள் மறைந்துவிட

மாமனவர் எனைவளர்த்த

கதையதனை நீஅறிவாய்

மாமனவர் மகளவட்கு

மணநாளும் முடிவாக

மகிழ்ச்சியோடு நானுமவள்

மணவேலை செய்துநின்றேன்

மாமன்மகள் மணமுடிந்தால்

மனதில்வாழ் நம்காதலதை

மாமனிடம் சொல்லிடலாம்

மனக்கணக்கை நான்போட்டேன்

மணநாளில் மணமகனோ

மாற்றாளுடன் ஓடிவிட

மாமனவர் செய்வதறியா

மலைப்புடனே சோர்ந்துவிழ

மாமன்குடி அழிந்திடவும்

மணமேடை மயானமாயும்

மாறிடாமல் தடுத்திடவே

மணக்கோலம் நான்பூண்டேன்.

கரம்பிடிப்பேன் உனையென்றே

காதலியே சொன்னேன்தான்

எனைவளர்த்தோர் யாசிக்க

என்செய்வேன் சொல்லிடுவாய்…


கிறுக்கல் - 7

காதல் ஒருபுறம்

கட்டுப்பாடில்லா உள்ளங்களின்

காமலீலைக்கு முகமூடி

காதல் மறுபுறம்

கன்னியமான வாழ்வில்

கலாச்சார சீர்கேடு

காதலில் மட்டுந்தானா

இவை இரண்டும்

காதலர் தினத்தை எதிர்க்க

உயிர்பிறப்பின் ஆதாரமாம்

உண்மை காதலையுணர்

உள்ளத்தின் உள்ளக்குமுறல்…


Tuesday, February 9, 2010

கிறுக்கல் - 6

இரு உள்ளங்கள்
சந்தேகம் க(அ)ழித்து
உணர்வினைக் கூட்டி
இன்பத்தைப் பெருக்கி
வாழ்க்கையை வகுத்தே
வாழ அச்சாணியாய் காதல்...

Friday, February 5, 2010

கிறுக்கல் - 5

அன்பின் அரவணைப்பில்

ஆண்டவனின் பரிசளிப்பாய்

இதமாய்க் கருவறையில்

ஈரைந்து மாதங்கள்

உறக்கத்தில் கழித்துவிட்டு

ஊழ்வினை அறுத்தெறிய

எடுத்த பிறவியென்றே

ஏகமாய் உணர்ந்துவிட்டு

ஐயமின்றி இறையுணர்ந்து

ஒறுத்தலுண்டு பாவிக்கென

ஓடையைப்போல் வாழ்ந்தேயுந்தன்

ஔசித்தியம் உயர்த்திடுவாய்