Sunday, January 31, 2010

கிறுக்கல் - 4

பொம்மையைக்
கதை சொல்லி
தூங்க வைத்ததாய்
உடனுறங்கும் குழந்தை
மழலையில் தாய்...

கிறுக்கல் - 3

காதலை மறுத்ததும்
காலனைத் தேடும் காதலரே
காதல் மறுப்பென்ன
மரணத் தீர்ப்பெழுதிய பேனாமுள்ளா...

Friday, January 29, 2010

கிறுக்கல் - 2

இதயச் சுவற்றில்
பதிக்கப்பட்ட
காதல் கண்ணாடியில்
விரிசல்
"சந்தேகம்"

கிறுக்கல் - 1


உன்னோடு
பேசாத பொழுதுகள்
நகர மறுக்கிறது
செயல் இழந்த
கடிகாரமாய்...

Thursday, January 28, 2010

எழுதப்படாத எண்ணம்


இதுவரை யாரும் எழுதா எழுத்தால்

உன்னுள் என்னை உணர்ந்திடச் செய்து

என்னை உனக்கே தந்திட எண்ணி

என்னுள் எழுத்தைத் தேடித் தேடி

எழுத்தே கிடைக்கா ஏழையாய் நின்று

எண்ணம் சொல்ல வழி அறியாது

கண்கள் இருளும் குழப்பத்தில் இன்றும்

எழுதிட அமர்ந்தேன் எழுத்துக்கள் இன்றி…

குழப்பத்தில் நான்


படிப்பினைகள் பெற
பாதைகள் பல
பயணங்கள் பல
பார்த்தே நிற்கிறேன்
பரிதவிக்கும் குழப்பத்தில்
பாதையை தெரிவு செய்ய...

Wednesday, January 27, 2010

உடனடித் தேவை - வெண்பா

உண்ண உணவும் உடுக்க உடையும்
உறங்க இடமும் உடனடித் தேவையெனத்
தோன்றிய மானுடர்க்கு, நல்மனிதத் தன்மை
உடனடித் தேவையாம் இன்று.

குறிப்பு : இங்கு தோன்றிய என்பது தொடங்கிய (அ) துவங்கிய எனும் பொருளில் வந்துள்ளது

Monday, January 25, 2010

உடனடித் தேவை

அழுகின்ற பிள்ளைக்கு
அம்மாவின் அமுதுணவு
உடனடித் தேவை…

பாலர் பருவத்தில்
பள்ளிதரும் படிப்பறிவு
உடனடித் தேவை…

வாலிபர்தாம், தலைநிமிர்ந்து
வாழ்ந்திடவோர் வேலையது
உடனடித் தேவை…

வாஞ்சையோடு பார்த்துக்கொள்ள
வயோதிகர்க்கு பிள்ளையன்பே
உடனடித் தேவை…

பட்டினியால் தவிப்போர்க்கு
பசிதீர்க்க உணவதுவே
உடனடித் தேவை…

மானங்காக்க உடலதனை
மறைத்திடவே உடைகளுந்தான்
உடனடித் தேவை…

தவிக்கின்ற எம்மீழத்
தமிழனுக்கு தனிஈழம்
உடனடித் தேவை…

குண்டுமழை பொழிகின்ற
காஷ்மீரில் அமைதியுந்தான்
உடனடித் தேவை…

இம்மாற்றங்கள் நிகழ்ந்திடவே
மனிதனாய் பிறந்திட்டோர்
மனந்தனிலே மனிதத்தன்மையே
உடனடித் தேவை…

பெயரில்லாதது

பரந்து நிற்கும்
பரவைத் தாயே – நின்
பாதம் தொட்டே
படகெடுத்தோமே

பசியால் தவிக்கும்
பிள்ளைகள் எமக்கு
பலவகை மீனை
பரிசளித்தாயே

பலநாள் இரவு
பிரிவால் வாடும் – எம்
பத்தினி வாழ்வில்
புயலளிக்காதே

பரிவோடு உயிரை
பிச்சை அளித்தால் –எம்
பிள்ளையை உன்புகழ்
பாடவைப்போமே…

Thursday, January 21, 2010

பெயரில்லாதது

வருகை பதிவு செய்த
வாழ்நாள் துவக்கத்தினின்று
வாழ்க்கை எதுவெனத் தெரியாமல்
விருப்பம் எதுவெனத் தெரியாமல்
வேகமாய் காலச் சுழலை
வெற்றி காண விரைகின்றோம்
இரைதேடும் காலன் பசிக்கு
வேட்டை நாமென உணராமல்…

Sunday, January 17, 2010

உறவு எனும் கண்ணாடி - வெண்பா

உடையும்முன் ஓருருவாய் உள்ளதைக் காட்டி
உடைந்தும் தனித்துகளாய் உள்ளதைக் காட்டி
உடைதுகள் ஒன்றாக்கிக் காணின் விகாரமாக்கும்
கண்ணாடி, வாழ்வில் உறவு

Friday, January 15, 2010

பசியும் பாடமும் – வெண்பா

வயிற்றுப் பசிசெவியைத் தாளிட - கேட்குமா
ஆசிரியர் சொல்லும்பா டம்



கண்கள் சொருக வயிறு பிசைய
கொடும்பசியால் வாடிடும் பிள்ளை விரும்புமா
கண்ணாய் அறிவளித்து தன்னை யுணரவைக்கும்
ஆசிரியர் சொல்லும்பா டம்…

Tuesday, January 12, 2010

சித்தனும் பித்தனும் - வெண்பா

சித்தம் கலங்கியே வாழும் மனிதனை

பித்தன் எனவே உரைத்து - உருவிலே

பித்தாய் இருப்பவன் வாக்கு பலித்திட

சித்தனெனச் சொல்லும் உலகு.

பொங்கல் திருநாள் - வெண்பா

கதிர்கள் வளர கரம்கொடுத்து காக்கும்

கதிரோன் குளிர கரும்போடு புத்தரிசி

பொங்கல் படைத்து உழவன் உளமகிழ்ச்சிப்

பொங்கியே பாடிடும் நாள்.

Monday, January 11, 2010

ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி - வரிகள் மாற்றப்பட்டது

சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…
சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…
கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே..
கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே..
நான் படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வல்லே
நான் எழுதுறேன் எழுதுறேன் எழுத்து வல்லே
ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ ஹோ
சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…

பரீட்சை வரும் முன்னலையே படிங்க
தினம் சொல்லி வைப்பார் வாத்தியாரு சரிங்க
பரீட்சை வரும் முன்னலையே படிங்க
தினம் சொல்லி வைப்பார் வாத்தியாரு சரிங்க
படிக்க நானும் அமர்கையில்
தூக்கம் வந்து கெடுக்கையில்
யார் நினைவில் தங்கி விடும் படிப்பு
இது சொல்வதற்கு சுலபம்
செஞ்சு பார்த்தா தெரியும்
படிக்கையிலே தூங்கத் தோனும் வயசு
இது படிக்கையிலே தூங்கத் தோனும் வயசு…
நான் படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வல்லே
நான் எழுதுறேன் எழுதுறேன் எழுத்து வல்லே
ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ ஹோ

பார்ப்பதற்கு புக் ரொம்ப சிறுசு
ஆனா பத்து பாடம் உள்ளுக்குள்ள இருக்கு
பார்ப்பதற்கு புக் ரொம்ப சிறுசு
ஆனா பத்து பாடம் உள்ளுக்குள்ள இருக்கு
மத்தியிலும் தேர்வுண்டு
முடிவிலும் தேர்வுண்டு
எழுதி விட்டா வந்து விடும் ரிசல்டு
இப்ப நான் படிச்ச படிப்பு
பிட் அடிச்ச ரிசல்டு
நல்லாத்தான் நான் படிச்சேன் படிப்பு
ரொம்ப நல்லாத்தான் நான் படிச்சேன் படிப்பு
நான் படிக்கிறேன் படிக்கிறேன் படிப்பு வல்லே
நான் எழுதுறேன் எழுதுறேன் எழுத்து வல்லே
ஹா ஹா ஹா ஹா… ஹோ ஹோ ஹோ ஹோ
சின்னவயசு பள்ளியிலே
வகுப்பு நடக்கையிலே
கட் அடிச்சு ஊர்முழுக்க சுத்தினேனே…
கட் அடிச்சு சுத்துறதை
பார்த்து விட்ட எந்தன் அப்பா
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே…
கோல் எடுத்து அடிக்க வர ஓடினேனே…

Sunday, January 10, 2010

சிறுமியின் உதவி

காகிதம் கிழித்து
குப்பை போடாதே
கன்டிக்கும் அம்மா

கஷ்டப்படுவோருக்கு
உதவிகள் செய்
உபதேசிக்கும் அப்பா

வீட்டின் குப்பையை
தினமும் அள்ளி
தெருவில் போட்டே
மகளைத் திட்டிடும் அம்மா

குப்பை பொறுக்கிடும்
சிறார்க்கு உதவியதாய்
தெருவைப் பார்த்தே
புன்னகை பூத்திடும் மகள்…

Friday, January 8, 2010

பார்த்தால் பசுமரம் - வரிகள் மாற்றப்பட்டது

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…



கண்களாலே பேசிக்கிறோம் நாலு மாசமா

அதை சொல்லாமலே மூடிவைச்சா காதலாகுமா

நாள்முழுதும் காத்திருக்கும் என்னைப்பாருமா

நீயும் கண்டுக்காம போனா இந்த ஜீவன்வாழுமா

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…

பொய்யும் புரட்டும் சொல்லிப் பலரும் காதலிப்பாங்க

நீயோ, நடந்துபோக பின்னால் வந்து பேசிப்பார்ப்பாங்க

காதல்கடிதம் திரும்பதிரும்ப கொடுத்துநிப்பாங்க

நீயும் திருமணத்தின் பேச்செடுத்தா ஓடிப்போவாங்க

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…


காதலதை எனக்குத் தர தயங்கலாகுமா

அடி காதலியே உன் மனதில் இன்னும் குழப்பமா

மனமிரண்டும் ஒத்தபின்னும் மௌனமாகுமா

மனதின்காதல் சொல்லியென்னைநீயும் வாழவையம்மா…

பார்வை பேசிடும் பிரிவுவந்தா உணர்ந்திடும்

காதல் பொய்யுமாகுமா, நீயுமுள்ளத்தை

மூடிவைச்சா உயிரும் வாழுமா…

Monday, January 4, 2010

இரண்டு மனம் வேண்டும்- வரிகள் மாற்றப்பட்டது

மௌனமுடைக்க ஒரு வழி தெரிந்தால்

மௌனம், உடைத்து விடலாம் – அவளின்

மனதையறிய ஒரு வழி தெரிந்தால்

காதலித்து விடலாம் – ஆனால்

தெரியவில்லையே ஒரு வழி – நான் என்ன செய்வேன்.

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி….

கண்ணும் கண்ணும் கலந்தபின்னால்,

கருத்தும் கருத்தும் கலந்தபின்னால்

கண்ணும் கண்ணும் கலந்தபின்னால்,

கருத்தும் கருத்தும் கலந்தபின்னால்

உள்ளம் இரண்டும் சேர்ந்தபின்னால்

உள்ளம் இரண்டும் சேர்ந்தபின்னால்

மொனப் பூட்டைப் போடாதே!

கண்களின் மொழியோ உள்ளம் மொழி

உள்ளத்தின் மொழியோ மௌன மொழி

கண்களின் மொழியோ உள்ளம் மொழி

உள்ளத்தின் மொழியோ மௌன மொழி

மௌனத்தின் மொழியே காதல் மொழி

மௌனத்தின் மொழியே காதல் மொழி

காதலை அறிய என்ன வழி…

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி

காதலியைக் கேட்டேன்

மௌனத் தடை வென்று

காதல் சொல்வாய் இன்று

காதல் வரம் வேண்டி…

Saturday, January 2, 2010

மஞ்சு விரட்டு

காலத்தின் சின்னமென்றும் தமிழனின் வீரமென்றும்
விலையில்லா உயிர்களதை விளையாட பனயம்வைத்து
காளையர்கள் காளையதை அடக்குவதே வீரமென்று
வீனான வாதங்கள் புரிகின்ற மானுடரே


வாழவேன்டிய காலமதில் வீரத்தின் பேர்சொல்லி
காலிழந்து கையிழந்து குடும்பத்தினர் கண்ணீர்வடிக்க
காலனுக்கு இரையாகும் காளைகளை கண்டுநீவிர்
காளைபிடி ஆட்டந்தடை செய்யதுனை புரிந்திடுவீரே…