Thursday, February 25, 2010

கிறுக்கல் - 18

படிக்கின்ற காலமதில் பலபணிகள் தேடிவர

படித்திட்ட படிப்பிற்கே பணியதனை செய்திடுவேன்

பிடிவாதம் பிடித்திட்டே தேடிட்டேன் பணியதனை

வேலையதும் கிடைத்ததுவே விரும்பாத வெளியூரில்

புதிதான இடமதிலே தெரியாத மொழிகேட்டு

திகைத்திட்டே நின்றிருக்க அலுவலகம் அனுப்பிவைத்த

பணியாளும் அழைத்திட்டான் போவோம்நாம் தங்குமிடம்

புரியாமல் நான்விழிக்க பையதனை அவன்தூக்க

புரிந்ததுவே எனக்குந்தான் செல்லுகின்றோம் தங்குமிடம்

கொட்டுகின்ற மழையதிலே குடையேதும் இல்லாமல்

ஆட்டோவைத் தேடித்தான் அலைந்திட்டோம் பையோடே

தங்குமிடம் சென்றடைந்து களைப்புதீர குளித்ததுமே

அனலாகக் தகித்ததுவே பசியாலே வயிறுந்தான்

சமைப்பவர்க்குப் புரியாது நான்பேசும் தமிழ்மொழி

எனக்குந்தான் தெரியாது அவன்பேசும் தேசமொழி

பசிக்கிறது என்றுசொல்ல பரிதவித்தேன் துடிதுடித்தேன்

புத்தகத்தைத் தேடிநின்றேன் பசிக்கிறது என்றுசொல்ல

பச்சைத்தண்ணீர் நானருந்தி பசிமறக்க படுத்துறங்க

நெஞ்சினிலே சூளுரைத்தேன் கற்கவேண்டும் பலமொழிகள்… J

No comments:

Post a Comment