Monday, September 5, 2011

ஏக்கம்

தோல்வியின் துயரால்
துவண்டு விழும்போதெல்லாம்
தூணாய் தாங்குவாய்...

ஊரறிய சிரிக்கும் என்னால்
நம்பி அழ முடியும்
உன் மடியில் மட்டும்...

என்னதான் மாயம் செய்வாயோ
தாங்கொனாத் துயரிலும் என்னுள்
தென்றலாய் உறக்கம் தர...

உறங்கும் கேசம் வருடி
உச்சி முகர்ந்து செல்வாய்
உள்ளம் உயிர்த்தெழச் செய்வாய்...

என்ன செய்வேன் இன்று
கண்ணீரோடு நான்
கடல் தாண்டி நீ...

இன்னும் எத்தனை நாளோ
எண்ணித் தவிக்கிறேன்...
உன்மடி புதைந்தழும் நாளுக்காய்.!

3 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

பவள சங்கரி said...

உள்ளம் உருகச் செய்த கவிதை. கடல் தாண்டிய தேவதை விரைவில் வந்து சேர வாழ்த்துகள்.

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி யூஜின் அவர்களே...

நன்றி சிப்பிக்குள் முத்து...

Post a Comment