Sunday, May 9, 2010

ஆல் இன் ஆல் சவுன்ட்மணி கம்ப்யூட்டர் வாடகை கடை

காட்சி 1: சவுன்ட்மணி கடையும் தொந்தில் என்ட்ரியும்

தொந்தில்: அண்ணே வணக்கம் அண்ணே.

சவுண்ட்மணி: வாடா பெட்ரமாக்ஸ் மண்டையா, என்னடா இந்த பக்கம் ?

தொந்தில்: என்ன அண்ணே புதுசா கடை எல்லாம் தொறந்திருக்கீங்க.

சவுண்ட்மணி: ஆமான்டா, பேரிக்கா மண்டையா, நம்மூருல கம்ப்யூட்டர் இல்லையே, நாமளும் சும்மா தான இருக்கோம், அதான் கம்ப்யூட்டர் ஒன்னு வாங்கிட்டு வந்து வாடகைக்கு விட்டு வியாபாரம் பண்றேன்டா.

தொந்தில்: உங்களுக்கு என்ன அண்ணே தெரியும், கம்ப்யூட்டரைப் பத்தி.

சவுண்ட்மணி: டேய், என்ன கேள்வி கேட்டடா நீ என்னையப் பார்த்து, இந்த ஆல் இன் ஆல் சவுன்ட்மணிக்கு தெரியாத வேலை ஒன்னு இந்த ஒலகத்துல இருக்குதாடா. என்ன தெரியனும் கேளுடா கம்ப்யூட்டர்ல. புட்டு புட்டு வைக்குறேன் நான் பணங்கொட்டை தலையா.

தொந்தில்: அடடடடா, அண்ணே நீங்க பெரிய அறிவாளி அண்ணே. கம்ப்யூட்டர் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க அண்ணே.

சவுண்ட்மணி: அடேய் பெட்ரமாக்ஸ் மண்டையா, இந்த ஊருலையே உன்னைய யாரும் பக்கத்துல கூட சேர்த்துறதில்லை. இருந்தும் உன்னைய ஏன் என் கூட வச்சிருக்கேன். என்னோட இந்த பெருமையெல்லாம் ஊருக்குள்ள சொல்லுவேன்னு தான். அப்பத்தான் இந்த ஊரு ஜனங்களுக்கு என் அருமை பெருமை எல்லாம் புரியும். முக்கியமா இந்த இளவயசுப் பொண்ணுங்க கிட்ட என் பெருமையைச் சொல்லனும்டா… என்ன சரியா…

தொந்தில்: சரிங்க அண்ணே. அப்படியே செய்யுறேண்ணே. எனக்கும் சொல்லித் தாங்க அண்ணே இதெல்லாம்.

சவுண்ட்மணி: என்னது உனக்கும் கம்ப்யூட்டர் தெரிஞ்சுக்கனுமா. இது என்ன தெரியுமாடா, கம்ப்யூட்டர். இதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமாடா. பஞ்சாயத்து டிவியை முட்டு சந்துல இருந்துக்கினு வேடிக்கை பார்க்குற நாய்க்கு ரவுசைப் பாரு, எகத்தாளத்தைப் பாரு. அடிக்கிறதுக்குள்ள ஓடிப்போயிடு.

( அடி வாங்காமல் தப்பிக்க தொந்தில் ஓட்டமெடுக்கிறார்)

காட்சி 2: தொந்தில் ஆக்ஷனும், சவுன்ட்மணி டென்ஷனும்

(அடிக்கு தப்பி ஓடிய தொந்தில், அடுத்த நாள் சவுன்ட்மணி, கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்வதைப் பார்க்கிறார். அப்பொழுது…)

தொந்தில்: அண்ணே, அண்ணே…

சவுண்ட்மணி: டேய், நான் பிஸியா இருக்கேன், டிஸ்டர்ப் பண்ணாத.

தொந்தில்: அண்ணே, என்ன அண்ணே செய்றீங்க. சொல்லுங்க அண்ணே…

சவுண்ட்மணி: டேய் ஆப்பிரிக்கா மண்டையா, கம்ப்யூட்டர் வாடகைக்கு கேட்டிருக்காங்கடா ஒரு வாரத்துக்கு. இதுல பேன் சரியா ஓடலை. அதான் ரிப்பேர் பண்றேன்டா.

தொந்தில்: அண்ணே, அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே. கம்ப்யூட்டர்ல என்னாத்துக்கு அண்ணே பேன்.

சவுண்ட்மணி: ஆங்… அப்படி கேளுடா பேரிக்கா மண்டையா. இதுக்குத்தான் இந்த ஆல் இன் ஆல் சவுன்ட்மணி வேணும்ன்றது. சொல்றேன் கேட்டுக்க. இதுதான் CPU. இந்தா இந்த வெத்தலை டப்பா மாதிரி இருக்குதே இதுதான் ஹார்ட் டிஸ்க். இந்தா இங்க சீப்பு மாதிரி பச்சைகலர்ல இருக்குதே இது தான் RAM. இது எல்லாம் கம்ப்யூட்டர் வேலை செய்யும் போது சூடாகும். இதெல்லாம் சூடாகாம இருக்கத்தான் இந்த பேன். இப்ப புரியுதாடா.

தொந்தில்: இப்படி பேன்ல ஆற வைச்சா எப்படிண்ணே சூடு குறையும் என்றபடி பக்கத்தில் இருக்கும் வாளித் தண்ணீரை CPU மீது ஊற்ற புகைமண்டலமாகிறது கம்ப்யூட்டர்.

(சவுன்ட்மணி முறைக்க சவுன்ட்மணியின் அடியிலிருந்து தப்பிக்க தொந்தில் ஓட்டமெடுக்கிறார்)

ரோசா: சார், சார்…

சவுண்ட்மணி: யாரும்மா என்னம்மா வேணும்.

ரோசா: சார், நான் ரோசா சார், எனக்கு டைப்படிக்க கம்ப்யூட்டர் வேணும் சார். இங்க கிடைக்கும்னு சொன்னாங்க. அதான் வந்தேன்.

சவுண்ட்மணி: ஏம்மா, டைப்படிக்க கம்ப்யூட்டர் தான் வேணுமா. இந்த டைப்ரைட்டர் எதுவும் வேணாமா.

ரோசா: அதெல்லாம் வேணாம் சார், கம்ப்யூட்டர் தான் வேணும்.

சவுண்ட்மணி: அப்படின்னா கம்ப்யூட்டர் எல்லாம் இப்போதைக்கு தர முடியாது போம்மா.

ரோசா: ஏன் சார், ஏன் கம்ப்யூட்டர் தர முடியாது.

சவுண்ட்மணி: ஆங்… ரோசான்னு பேரு வச்சிருக்குறவங்களுக்கெல்லாம் இந்த கடையில கம்ப்யூட்டர் தர்ரதில்லை. போவியா…

ரோசா: ரொம்பத்தான்... ம்க்கும்…

(புகையும் கம்ப்யூட்டரைப் பார்த்தவாறே கடை போர்டை உடைக்கிறார் சவுண்ட்மணி. திரை விழுகிறது.)

12 comments:

பனித்துளி சங்கர் said...

ஆஹா கலக்கல் பதிவு நண்பரே !
கவுண்டமணி செந்தி நகைச்சுவை காட்சிகளை நேரில் பார்த்த ஒரு உணர்வை உங்களின் சவுன்ட்மணி , தொந்தில் பதிவு ஏற்படுத்திவிட்டது . பகிர்வுக்கு நன்றி !

பிரசாத் said...

தங்களின் ஊக்க வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி சங்கர் அவர்களே...

duraian said...

லேட்டஸ்ட் கவுண்டர் / செந்தில் காம்பினேசன் மிக அருமை :)

பிரசாத் said...

நன்றி துரை ஐயா...

Balaji said...

மாப்ள, அந்த ஃபைனல் டச் எப்படி குடுக்கப் போறீங்கனு யோசிச்சிக்கிட்டே படிச்சேன். ஹா ஹா ஹா, தண்ணிய CPU உள்ள செந்தில் ஊத்திட்டாரே, ஹா ஹா ஹா ஹா அசத்திட்டீங்க போங்க!

Unknown said...

romba nalla irundathu prasath avl.ungalin sinthanai melum valara ennodaiya manamarntha vazthukal.. ungal padaipuku nanri.

Iyappan Krishnan said...

நல்லாருக்கப்பேய்... இதை அப்படியே ஒரு சிறுகதையா கொண்டுவந்திருக்கலாம் :)

பிரசாத் said...

நன்றி மாம்ஸ்...

பிரசாத் said...

நன்றி பிரவீத்...

பிரசாத் said...

ஜீவ்ஸ் அண்ணே எனக்கு சிறுகதை எழுத வராது அதான் இப்படி... :)

ஜாரியா said...

நல்லா இருக்குடா பிரசாத்து சவுண்டுமனி சர்விஸ்......

கவிநா... said...

ஹைய்யோ அண்ணா சிரிச்சு சிரிச்சு முடியல... கவுண்டமணி செந்தில் நகைச்சுவையை நேரில் பார்த்த மாதிரி இருக்கு. ரெண்டு பேர் காம்பினேசனை கண் முன்னாடி கொண்டுவந்துடீங்க.

அந்த வாளித்தண்ணீர் நல்ல யோசனை. :)

Post a Comment