Wednesday, September 1, 2010

கிறுக்கல் - 48

துப்பாக்கி குண்டு துளையிட்ட காலுடன்
தூக்கி வீசப்பட்டிருந்தேன்
ஆழி சூழ் வெள்ளம் மெதுமெதுவாய் உலகை
ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது
உனது வருகைக்கு உரித்தான சமயம்
இதுவல்ல செல்
நீயிருந்த இடத்தில் இன்னொருவன் இருந்தால்
விட்டுவிடு அவனை
உனக்கான இடமாய் இன்னொன்று இருக்கும்
தேடிச்செல் அதனை
அசரீரி குரலாய் அறிவித்துச் சென்றார்
கடவுள் கனவில்
அர்த்தத்தை தேடி அலைகின்றேன் நானும்
தடங்களை நனவில்...

4 comments:

A N A N T H E N said...

கனவு கினவு கண்டியா டா?

பிரசாத் வேணுகோபால் said...

ஆமாம்.. சரியா சொல்லிட்டியே...

பேசி ரொம்ப நாளாச்சு... நல்லா இருக்கியா...

கவிநா... said...

அண்ணா கவிதை நல்லா இருக்கு... உண்மையாவே கனவா கண்டீங்க? எதுவாக இருந்தாலும் சரி நல்லா யோசிச்சிருக்கீங்க.... :)

பிரசாத் வேணுகோபால் said...

ம்ம்ம்... நன்றி கவி...

Post a Comment