Sunday, July 17, 2011

பசி - வெண்பா

பிறப்பில் தொடங்கி இறக்கும் வரையில்
இருக்கும் பிணியே பசி.

தாயின் வயிற்றில் கருவாய் தரித்ததும்
நோயாய் பிறக்கும் பசி.

மொழிந்திடா பிள்ளை பசியது வந்திட
மொழியுமே பாங்காய் அழுது.

புதிதாய் பிறந்த குழந்தையும் பாலாய்
உதிரம் குடிக்கும் பசிக்கு.

வளரும் குழந்தை தளரும் நடையில்
பசியால் தவிக்கும் பொழுது.

பசியின் பிணியை மனிதர்க்கு போக்கிட
மருந்தாய் இருப்பது உணவு.

பசிக்கு உணவின்றி பலநாள் இருக்க
மடிவான் மனிதனும் தான்.

மனிதனின் பத்து மதிக்கும் குணங்கள்
பசிவர போகும் பறந்து.

எளியோன் இரக்கும்; வலியோன் திருடும்
பழியைத் தருமே பசி.

பசியை அடக்கும் வழியைத் தெரிந்திலார்
ஆசையை வென்றோரும் ஆம்.

இறந்த உடலுக்கு இரைப்போம் அரிசி
இறுதி மருந்தாய்ப் பசிக்கு.

அதீதம் இதழில் : http://www.atheetham.com/story/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF

7 comments:

சமுத்ரா said...

arumai

வல்லிசிம்ஹன் said...

Very nice. sorry to comment in english.

பிரசாத் said...

நன்றி சமுத்ரா அவர்களே...

நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. அதீதம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு.. வாழ்த்துகள்.

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அமைதிச்சாரல்...

Post a Comment