Monday, July 25, 2011

கல்லூரிச் சாலை

நான் ரொம்ப நாளா எழுத நினைத்த ஒரு பதிவு... பள்ளிப் படிப்பு படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வந்தால் போதும்... இதுதான் வாழ்க்கையோட முதல் டர்னிங் பாயின்ட்டா, ஒழுங்காப் படி, இப்ப நீ படிக்கிறது தான் உன் லைபைத் தீர்மானிக்கும் ஏகப்பட்ட அறிவுரை வரும்... நாமளும் நம்மால முடிந்த வரை படிச்சு மார்க் எடுப்போம்...

பத்தாவது பாஸ் ஆன பின்னாடி ஒரு வருஷம் கொஞ்சம் குடைச்சல் இல்லாம இருக்கும், அப்புறம் பனிரெண்டாவது ஸ்டார்ட் ஆயிடும்... கூடவே, பத்தாவதுல கொடுத்த அட்வைஸ்களை விட அதிகம் அட்வைஸ்கள்... உன் வாழ்க்கையில நீ என்ன ஆகப் போறன்றதை தீர்மானிக்கப் போவது இந்த ஒரு வருஷம் தான்டானு.... ஏகப்பட்ட அறிவுரைகள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அப்படின்னு பல பேரு கிட்ட இருந்தும் வரும்... இதுலையும் கொஞ்சம் நல்ல மார்க் வாங்கிடுவோம்...

இப்பதான் ஒரு டிவிஸ்டு வரும் பல மாணவ, மாணவிகளோட வாழ்வில... என்னா அதுன்னா, பனிரெண்டாவது வரைக்கும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆண்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி்யில் படித்த பெண்களுமாத்தான் பல பேர் படிச்சு இருந்திருப்பாங்க... அவங்களை எல்லாம் கல்லூரின்ற ஒரு வளாகத்துக்குள்ள இருபாலரும் இருக்கலாம்னு அடைச்சு வைக்கும் போது தடுமாறும் பாருங்க ரெண்டு பேரோட மனசும்... ஹ்ம்ம்ம்... இதில, சகோதரிகள் இல்லாத பசங்களும், சகோதரர் இல்லாத பொண்ணுங்களும் கல்லூரிக்கு வந்து எப்படி அடுத்தவங்களோட சகஜமா பழகுறதுனு தெரியாம, நட்பின் வட்டம் எதுனு புரியாம நட்பை காதலாக எண்ணி குழப்பமாவாங்க பாருங்க... அப்பப்பா... உண்மையிலேயே கல்லூரி படிப்புன்றது மாணவர்கள் வாழ்க்கையில, பின்னாடி டயர் வெடித்த லோடு லாரியை ஆக்சிடென்டாக்காம ஓரம் கட்டுறதுக்குச் சமம்...

இந்தச் சமயத்துல இன்னொரு கொடுமை என்னன்னா, கல்லூரிக்குப் போனதும் பெத்தவங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே விழும் விரிசல்... பனிரெண்டாவது படிக்கும் வரை படினு சொல்ற பெத்தவங்க கூட கல்லூரி சேர்த்தறதும், அவன் கேட்கறப்ப பீஸு கட்டுறதும் தான் பெருசா நினைக்குறாங்க... இத்தனை வயசுக்கப்புறமும், படி படினு பிள்ளைகளைச் சொன்னா நல்லாருக்குமானு சொல்லாம விடறாங்க, அப்படிச் சிலர் சொன்னாலும் உனக்கு ஒன்னும் தெரியாதும்மா(ப்பா) என்று பெற்றவர்கள் வாயை அடைக்கும் பிள்ளைகளால சொல்றதை நிறுத்திடறாங்க...

இதனால என்னாகுது... பல மாணவர்கள் வாழ்க்கை ஆக்ஸிடென்டான லாரியாயிடுது... உண்மையிலேயே பத்தாவதும், பனிரெண்டாவதும் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்கு கடைகால்னா கல்லூரி வாழ்க்கை என்பது அது மேல கட்டுற வீடு மாதிரி... கல்லூரி வாழ்க்கையில அவங்க கட்டப் போற வீடு தான் அடுத்து வாழும் பல வருடங்களும் அவங்க குடி இருக்கப் போற இடமுனு கல்லூரி வாழ்க்கை முடியற வரைக்கும் மாணவர்களுக்குத் தெரியறதில்லை... தெரிஞ்சுக்க விரும்புறதில்லை... அப்படித் தெரிஞ்சுக்கிட்டு நல்ல வீடா கட்டிக்கிறவன் கட்டுன வீட்டுக்குள்ள ஜாலியா உட்கார்ந்து மீதி வாழ்க்கை வாழுறான்... கட்டாதவனும், கட்டிக்கத் தெரியாதவ்னும் வெயிலிலும், குளிரிலும் மாறி மாறி கஷ்டப்படுறான்...

சோ, படிக்கும் இளைஞர்களே, கல்லூரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க, அதே சமயத்துல உங்கள் எதிர்கால வாழ்க்கையையும் படிக்கும் போதே நினைச்சு பாருங்க... மூன்று, நான்கு அல்லது ஐந்து வருட கல்லூரி வாழ்க்கையை ஜாலியா போக்கிட்டு, ஏதோ பேருக்கு டிகிரி வாங்கிட்டோம்னு இல்லாம, கல்லூரியை விட்டு வெளிவரும் பொழுது என்னவா வெளிவரணும்னு முடிவு பண்ணிட்டு வெளியில வாங்க...

கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்...

4 comments:

ராமலக்ஷ்மி said...

//இதனால என்னாகுது... பல மாணவர்கள் வாழ்க்கை ஆக்ஸிடென்டான லாரியாயிடுது... உண்மையிலேயே பத்தாவதும், பனிரெண்டாவதும் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்கு கடைகால்னா கல்லூரி வாழ்க்கை என்பது அது மேல கட்டுற வீடு மாதிரி... கல்லூரி வாழ்க்கையில அவங்க கட்டப் போற வீடு தான் அடுத்து வாழும் பல வருடங்களும் அவங்க குடி இருக்கப் போற இடமுனு கல்லூரி வாழ்க்கை முடியற வரைக்கும் மாணவர்களுக்குத் தெரியறதில்லை... தெரிஞ்சுக்க விரும்புறதில்லை... அப்படித் தெரிஞ்சுக்கிட்டு நல்ல வீடா கட்டிக்கிறவன் கட்டுன வீட்டுக்குள்ள ஜாலியா உட்கார்ந்து மீதி வாழ்க்கை வாழுறான்... கட்டாதவனும், கட்டிக்கத் தெரியாதவ்னும் வெயிலிலும், குளிரிலும் மாறி மாறி கஷ்டப்படுறான்...//

நன்று பிரசாத்.

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

சாந்தி மாரியப்பன் said...

//பத்தாவதும், பனிரெண்டாவதும் வாழ்க்கை என்ற கட்டிடத்திற்கு கடைகால்னா கல்லூரி வாழ்க்கை என்பது அது மேல கட்டுற வீடு மாதிரி... கல்லூரி வாழ்க்கையில அவங்க கட்டப் போற வீடு தான் அடுத்து வாழும் பல வருடங்களும் அவங்க குடி இருக்கப் போற இடமுனு கல்லூரி வாழ்க்கை முடியற வரைக்கும் மாணவர்களுக்குத் தெரியறதில்லை... தெரிஞ்சுக்க விரும்புறதில்லை... அப்படித் தெரிஞ்சுக்கிட்டு நல்ல வீடா கட்டிக்கிறவன் கட்டுன வீட்டுக்குள்ள ஜாலியா உட்கார்ந்து மீதி வாழ்க்கை வாழுறான்... கட்டாதவனும், கட்டிக்கத் தெரியாதவ்னும் வெயிலிலும், குளிரிலும் மாறி மாறி கஷ்டப்படுறான்//

கரெக்டா சொன்னீங்க.. இப்பத்திய இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னா பிடிக்கவும் செய்யாது. அவங்களைப்பொறுத்தவரை கல்லூரிக்காலம்ங்கறது இளமைக்காலத்தை எஞ்சாய் செய்யறது மட்டுமே. எஞ்சாயும் செய்து குறிக்கோளிலும் முனைப்பா இருக்கறவன் பிழைச்சுப்பான், மத்தவங்க பாடுதான் கஷ்டம்.

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அமைதிச்சாரல் அவ்ர்களே...

Post a Comment