Monday, August 9, 2010

வரதட்சினை

பெண்ணின் நிறம் குறைவு
அரசாங்க உத்தியோகம்
வீட்டிற்கு ஒரே பையன்
மணமகன் வீட்டில் பேசப்பேச
அடுத்து காத்திருக்கும் பெண்களை எண்ணி
மணமகள் வீட்டில் தவிப்பு
எத்தனை பவுனில் நிற்குமோ
மூத்தவள் புக்கக விலை...


வரதட்சனை வாங்கேனென்ற
கொள்கையால் மனம் நொந்தேன்
எனை நொந்தே வெளி வந்தேன்...
மச்சி வீடிருக்கு
மாருதி காரிருக்கு,
அரசாங்க பணியிருக்கு
மவராசன் பொலிருக்கான்
இருந்தும் ஏன் கேட்கலையோ
வரதட்சனை இவனுந்தான்
தெரியாத இடத்தினிலே
குறையேதும் இருந்திடுமோ
தெரிஞ்சுகிட்டே பேசிடலாம்
மத்தகதை என்றேதான்
முனுமுனுத்த கிழவி பேச்சால்...

1 comment:

கவிநா... said...

அடக்கடவுளே... நல்லவங்களா இருக்க விடமாட்டாங்க போலிருக்கே!!!! இப்படியும் நடக்குதுன்னு கவிதையா காட்டியிருக்கீங்க.. நல்லா இருக்கு அண்ணா....

Post a Comment