Tuesday, November 16, 2010

தாய்-ஹைக்கூ குறள்கள்




















சுமைகருதா(து) ஈரைந்து மாதம் இமைபோல்
சுகமாய்க் கருவைக்காப் பாள்.

அகத்தில் சுமந்த வலியை மறப்பாள்

மகவது மண்தொடக் கண்டு.


பசிக்கும் குழந்தை ருசிக்கத் தருவாள்

ரசித்து முலைப்பால் உணவு.


நாவால் உணவை வெளித்தள்ளும் பிள்ளைக்குப்

பாங்காய் படைப்பாள் உணவு.


மழலை மொழியை உலகினர் மெச்ச

பலமொழி என்பாள் புகழ்ந்து.


தவழும் குழந்தை நடந்திடச் செய்யும்

தவத்தினில் தன்னைமறப் பாள்.


நடைபயிலும் பிள்ளை நடந்திட தானும்

நடைபயில்வாள் பிள்ளை உடன்.


ஓடித் தொடவரும் பிள்ளை சிரித்திட

ஓடியும் தோற்பாள் அவள்.


பாடம் பயிலும் குழந்தை மொழிந்திட

பாடம் பயில்வாள் அவள்.


தோல்வியில் பிள்ளை துவண்டு விழுந்திட

தோள்தரு வாள்விழுதாய் தாய்.


(திருத்தம்: நன்றி, துரை ஐயா)

3 comments:

கவிநா... said...

அற்புதமான குறள்கள்... அருமை அண்ணா...

//அகத்தில் சுமந்த வலியை மறப்பாள்

மகவது மண்தொடக் கண்டு.


ஓடித் தொடவரும் பிள்ளை சிரித்திட

ஓடியும் தோற்பாள் அவள்.//


இந்த இரண்டும் மிக அருமை....

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

பிரசாத் said...

நன்றி தங்காய்...

நன்றி தமிழ்த்தோட்டம் அவர்களே...

Post a Comment