Sunday, January 31, 2010

கிறுக்கல் - 4

பொம்மையைக்
கதை சொல்லி
தூங்க வைத்ததாய்
உடனுறங்கும் குழந்தை
மழலையில் தாய்...

கிறுக்கல் - 3

காதலை மறுத்ததும்
காலனைத் தேடும் காதலரே
காதல் மறுப்பென்ன
மரணத் தீர்ப்பெழுதிய பேனாமுள்ளா...

Friday, January 29, 2010

கிறுக்கல் - 2

இதயச் சுவற்றில்
பதிக்கப்பட்ட
காதல் கண்ணாடியில்
விரிசல்
"சந்தேகம்"

கிறுக்கல் - 1


உன்னோடு
பேசாத பொழுதுகள்
நகர மறுக்கிறது
செயல் இழந்த
கடிகாரமாய்...

Thursday, January 28, 2010

எழுதப்படாத எண்ணம்


இதுவரை யாரும் எழுதா எழுத்தால்

உன்னுள் என்னை உணர்ந்திடச் செய்து

என்னை உனக்கே தந்திட எண்ணி

என்னுள் எழுத்தைத் தேடித் தேடி

எழுத்தே கிடைக்கா ஏழையாய் நின்று

எண்ணம் சொல்ல வழி அறியாது

கண்கள் இருளும் குழப்பத்தில் இன்றும்

எழுதிட அமர்ந்தேன் எழுத்துக்கள் இன்றி…