Friday, June 10, 2011

குழந்தைப் பாடல் - 3

சின்ன சின்ன மழைத்துளி

சினுங்கும் ஓசை மழைத்துளி

ஓட்டின் மீது விழுகுது

சோளப் பொறியாய் வெடிக்குது

மெல்ல மெல்ல நடக்கிறேன்

மெதுவாய் கதவைத் திறக்கிறேன்

கூரை சிந்தும் மழையை நான்

கின்னம் வைத்துப் பிடிக்கிறேன்

தாளம் மழை போடுது

வானம் வெடி போடுது

வானம் வெடி போடையில்

பூமிப் பந்து மிளிருது

மின்னல் இடி கண்டுநான்

மிரண்டு உள்ளே ஓடினேன்

அன்னை மடி தேடிநான்

என்னை நானும் மூடினேன்...

6 comments:

Vidhoosh said...

very nice.

include in tamilmanam and tamilish

கவி அழகன் said...

அருமையாய் பாடல் வந்துள்ளது

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

நன்றி யாதவன் சார்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

குழந்தைப்பாடல் மொழி இனிக்கிறது...

பிரசாத் வேணுகோபால் said...
This comment has been removed by the author.
பிரசாத் வேணுகோபால் said...

நன்றி கவிதை வீதி சௌந்தர் அவர்களே...

Post a Comment