Friday, February 26, 2010

கிறுக்கல் - 20

சல சல காகித சத்தம்

சாந்தமாய் கைகள் பேசும்

சிந்திக்கும் நேரம் யாவும்

சீராய்க் காலடிக் கேட்கும்

சுற்றிடும் ஆசிரியர் கண்டு

சூடாகி மூளை குழம்ப

செவ்வனே படித்தவர் எழுத

சேட்டைகள் செய்திட்ட நானோ

சைகையில் காலம் கடத்தி

சொந்தமாய் எழுதிட தெரியா

சோகமாய் இருப்பதைக் கண்டு

சொக்கியக் குறைவோ என்றே

ஆசிரியர் என்னைக் கேட்க

அடங்கனா சிரிப்பால் வகுப்பே

சிரித்திட்ட நாளை எண்ண

சிரிக்கிறேன் இன்றும் நானே… J

3 comments:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !
கவி அருமை நண்பரே . வாழ்த்துக்கள் !

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மறுமொழி பெட்டியில் உள்ள Word verification நிக்கிவிட்டால் மறுமொழி இடுவதற்கு அனைவருக்கும் எளிதாக இருக்கும் . சற்று அதை கவனிக்கவும்

கோல்ட்மாரி said...

மச்சி அடிச்சி தூள் கிளப்பிட்ட

Post a Comment