Tuesday, September 15, 2009

பரதேசி

அன்பை வாரிதந்த அம்மாவை விட்டு

ஆதரவாய் தோள்தந்த அப்பாவை விட்டு

இன்னலில் உதவிய உற்றாரை விட்டு

ஈசன் கோவிலின் இசையை விட்டு

உள்ளம் தொலைத்த ஊரனி விட்டு

ஊர் திருவிழாவின் உவகையை விட்டு

எடுத்து வளர்த்த பூனையை விட்டு

ஏற்றம் இரைத்த நிலத்தை விட்டு

ஒட்டிப் பிறவா நண்பனை விட்டு

ஓடி ஆடிய மைதானத்தையும் விட்டென

பலதையும் தொலைத்து பரதேசம் வந்து

பரதேசி ஆனேன் பாழும் பணத்திற்காக....

1 comment:

கோல்ட்மாரி said...

வெளியூர் சென்று வாழும் நண்பர்களுக்காகவே எழுதின கவிதை , ரொம்ப நல்லா இருக்குது !

Post a Comment